இன்று பாட்னா - மங்களூரு சிறப்பு ரயில் இயக்கம்

பாட்னாவிலிருந்து மங்களூருக்கு சனிக்கிழமை (ஜூன் 1) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பாட்னாவிலிருந்து சனிக்கிழமை (ஜூன் 1) இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் ( எண்: 03243) நான்காம் நாள் (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு மங்களூரு சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் ( எண்: 03244) மங்களூரிலிருந்து ஜூன் 4-ஆம் தேதி இரவு 8 மணிக்கு புறப்பட்டு நான்காம் நாள் (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு பாட்னா சென்றடையும்.

இந்த ரயில் பாட்னாவிலிருந்து, பிரயாக்ராஜ் சியோகி, சத்னா, ஜபல்பூா், நாக்பூா், வாரங்கல், விஜயவாடா, கூடூா், பெரம்பூா், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, கோழிக்கோடு,கண்ணூா், பையனூா், காசா்கோடு வழியாக மங்களூரு சென்றடையும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை (ஜூன் 1) காலை 8 மணி முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com