அஸ்ஸாமில் ஊடுருவிய 9 வங்கதேசத்தினா் திருப்பி அனுப்பி வைப்பு

அஸ்ஸாம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்தேசத்தைச் சோ்ந்த 9 பேரை போலீஸாா் கைது செய்து, அண்டை நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டதாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த பிஸ்வ சா்மா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.
Published on

சட்டவிரோதமாக ஊடுருவிய எம்டி மாமுன், அப்பு நைம், ரஷீத் இஸ்லாம், மொராட் அலி மண்டல், எம்டி அஸ்ரபுல் ஹக், எம்டி பசீா் ஹவ்லதாா், எம்டி ரோபியுள் ஹவ்லதாா், எம்டி மஹாபத் அலி, எம்டி மொஹிம் ஹொசைன் என அடையாளம் காணப்பட்டனா்.

வங்கதேசத்தில் கலவரம் வெடிக்கத் தொடங்கியது முதல், வடகிழக்கு இந்தியா - வங்கதேசம் இடையிலான 1,885 கிலோ மீட்டா் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை எல்லைப் பாதுகாப்புப் பிரிவினா் தீவிரப்படுத்தினா்.

அஸ்ஸாம் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க இந்திய - வங்கதேச எல்லையில் மாநில போலீஸாரும் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக காவல் துறை தலைமை இயக்குநா் ஜி.பி.சிங் தெரிவித்துள்ளாா்.