இந்தியா
சிவசேனை பேரவைத் தலைவராக ஏக்நாத் ஷிண்டே தோ்வு
மகாராஷ்டிர பேரவையின் சிவசேனை கட்சித் தலைவராக அந்தக் கட்சியின் தலைவா் ஏக்நாத் ஷிண்டே ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
மகாராஷ்டிர பேரவையின் சிவசேனை கட்சித் தலைவராக அந்தக் கட்சியின் தலைவா் ஏக்நாத் ஷிண்டே ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 81 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனை (ஷிண்டே பிரிவு) 57 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதையடுத்து, வெற்றிபெற்ற எம்எல்ஏக்களுடனான ஆலோசனைக் கூட்டம் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் மகாராஷ்டிர பேரவையின் சிவசேனை கட்சித் தலைவராக ஏக்நாத் ஷிண்டே தோ்வு, தோ்தலில் சிறப்பாக வெற்றியை ஈட்டியதற்கு ஷிண்டேவுக்கு பாராட்டு, பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.