மகாராஷ்டிரத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸின் 16 எம்எல்ஏக்களும் பாஜகவில் சேர வேண்டும் என்று பாஜக தலைவர் ஆஷிஷ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 288 சட்டமன்றத் தொகுதிகளில் 230 இடங்களைக் கைப்பற்றியது. அதேநேரத்தில் மகா விகாஸ் அகாடி சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 46 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
மகா விகாஸ் அகாடியின் அங்கமான காங்கிரஸ் 16 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. பாஜக-மகாயுதி கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது.
காங்கிரஸின் இந்தச் சரிவு அனைத்து இடங்களிலும் நடக்கிறது. நாக்பூர் மாவட்டத்தில் உள்ள சவ்னர் தொகுதியில் தேர்தலில் வெற்றி பெற்ற தேஷ்முக் இதைக் கூறியுள்ளார்.
இந்த நிலை ஒவவொரு மாநிலத்திலும், வாக்காளர் எண்ணிக்கையிலும் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருவதால் காங்கிரஸுக்கு வேறு வழியில்லை என்றும், எதிர்க்கட்சிகளுக்கு இந்த முடிவு புதிய வீழ்ச்சி.
காங்கிரஸுக்கும், அதன் எம்எல்ஏக்களுக்கும் எதிர்காலம் இல்லை. மகாராஷ்டிரத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட தேஷ்முக் 2023 ஜூன் மாதத்தில் பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.