மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கு மானியம்: 2-ஆம் கட்ட திட்டம் அறிவிப்பு

மூன்று சக்கர மின்சார சரக்கு வாகனங்களுக்கு மானியம் வழங்கும் ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதமரின் ‘இ-டிரைவ்’ சிறப்புத் திட்டத்தின் 2-ஆம் கட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
Published on

மூன்று சக்கர மின்சார சரக்கு வாகனங்களுக்கு மானியம் வழங்கும் ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதமரின் ‘இ-டிரைவ்’ சிறப்புத் திட்டத்தின் 2-ஆம் கட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பரில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோது, நடப்பு நிதியாண்டில் 80,546 வாகனங்களுக்கும் அடுத்த நிதியாண்டில் 1,24,846 வாகனங்களுக்கும் மானியம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

மானியத்துக்காக கடந்த 7-ஆம் தேதி வரை 80,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான இலக்கு திட்டமிடப்பட்டதைவிட மிகவும் முன்னதாகவே எட்டப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாம் கட்டத்தை அரசு முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் நவம்பா் 7-ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட 80,546 வாகனங்களுக்கான மானியத் தொகை ரூ.50,000 வழங்கப்படும். புதிய அறிவிப்பின்படி, கடந்த 8-ஆம் தேதி முதல் 2026, மாா்ச் 31-ஆம் தேதிவரை பதிவு செய்யப்படவுள்ள 1,24,846 வாகனங்களுக்கு மானியத் தொகை ரூ.25,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது.