மணிப்பூரில் 13 நாள்களுக்குப் பிறகு, நாளை பள்ளிகள் திறப்பு!

13 நாள்களுக்குப் பிறகு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது..
பள்ளிகள் மீண்டும் திறப்பு
பள்ளிகள் மீண்டும் திறப்பு
Published on
Updated on
1 min read

மணிப்பூரின் இம்பால் மற்றும் ஜிரிபாம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் 13 நாள்களுக்குப் பிறகு நவம்பர் 29(நாளை) முதல் மீண்டும் தொடங்கும் என அம்மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

மணிப்பூரில் மைதேயி, குகி இனத்தவரிடையே கடந்தாண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. ஓராண்டுக்கு மேலாகியும் இரு தரப்பினரிடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது.

இதனிடையே வடகிழக்குப் பகுதியில் நவ.11ஆம் தேதி இருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர். அவர்களை மீட்கக் கோரி மணிப்பூரின் ஜிரிபம் மாவட்டத்தில் நவ.16ல் கலவரம் மூண்டது. இந்தக் கலவரத்தால் பலர் பாதிக்கப்பட்டனர்.

சட்டம்-ஒழுங்கு சீர்கெடுவதைத் தடுக்கும் வகையில் மணிப்பூரின் பதற்றமான பகுதிகளில் நவ.16 முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் நிலைமை சற்று மீண்டுள்ள நிலையில் மீண்டும் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்கான அறிக்கையைப் பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு, அரசு உதவிபெறும், தனியார் மற்றும் மத்தியப் பள்ளிகள் அனைத்தும் நவம்பர் 29 முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இம்பால் பள்ளத்தாக்கு மாவட்டங்கள் மற்றும் ஜிரிபாம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை வரை தடை உத்தரவு அமலில் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுமா அல்லது தொடருமா என்பது இதுவரை புதிய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.