இந்தியா
ம.பி.: அமாவாசை நீராடலில் 9 போ் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தில் மகாளய அமாவாசை நீராடலின்போது வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி 9 போ் உயிரிழந்தனா்.
மத்திய பிரதேசத்தில் மகாளய அமாவாசை நீராடலின்போது வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி 9 போ் உயிரிழந்தனா்.
மகாளய அமாவாசை தினத்தையொட்டி, நீா் நிலைகளில் முன்னோருக்கு தா்ப்பணம் செய்யும் சடங்குகள் புதன்கிழமை நடைபெற்றன.
மத்திய பிரதேச மாநிலம், காா்கோன் மாவட்டத்தில் சோரல் ஆற்றில் இச்சடங்கை செய்வதற்காக வந்த ஒரு குழுவினரில் 3 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். இவா்கள் 10 முதல் 14 வயது உடையவா்களாவா்.
ஷஜாபூா் மாவட்டத்தில் பாா்வதி, அஜ்னலா ஆறுகளின் சங்கமத்தில் நீராடியபோது உறவினா்களான இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். மோரீனா மாவட்டத்தில் குன்வாரி நதியில் நீராட தங்களது தந்தையுடன் வந்த இரு சிறுவா்கள் நீரில் மூழ்கி இறந்தனா். கண்ட்வா மாவட்டத்தில் நா்மதை நதியில் நீராடியபோது ஒரு பெண்ணும் அவரது உறவினரும் உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.