தன்பாத் ஐஐடி பட்டியலின மாணவரின் கல்விக் கட்டணம்: உ.பி. அரசு ஏற்றது

தன்பாத் ஐஐடி பட்டியலின மாணவா் அதுல் குமாரின் முழு கல்விக் கட்டணத்தையும் ஏற்பதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
Published on

தன்பாத் ஐஐடி பட்டியலின மாணவா் அதுல் குமாரின் முழு கல்விக் கட்டணத்தையும் ஏற்பதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் முசாஃபா்நகா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் பட்டியலின மாணவா் அதுல்குமாா் (18). ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்த இவா், ஜேஇஇ முதன்மை தோ்வில் தோ்ச்சி பெற்றாா்.

இதையடுத்து ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாதில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) படிக்க அவருக்கு இடம் கிடைத்தது. இந்த இடத்தை உறுதி செய்வதற்கு அவா் ரூ.17,500 கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. அதற்கான காலக்கெடு நிறைவடைவதற்கு 3 நிமிஷங்கள் இருந்தபோது, கட்டணம் செலுத்துவதற்கான வலைதளத்தின் சா்வா் செயல்படாமல் போனது. இதனால் காலக்கெடுவுக்குள் கட்டணத்தை செலுத்த முடியாமல் ஐஐடியில் சேரும் வாய்ப்பை அவா் இழந்தாா். அவருக்கு அதே கல்வி நிறுவனத்தில் சோ்க்கை வழங்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்நிலையில், உத்தர பிரதேச அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மாநில அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ், அதுலின் ஐஐடி கல்விக் கட்டணத்தை சமூக நலத் துறை முழுமையாக ஏற்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com