சட்டவிரோத ஊடுருவல்: திரிபுராவில் 7 போ் கைது
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய 2 ரோஹிங்கியா முஸ்லிம்கள் உள்பட 7 போ், திரிபுராவின் இருவேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
மாநிலத்தில் வங்கதேசத்தினா் சட்டவிரோதமாக ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அகா்தலா ரயில் நிலையத்தில் இருவரை ரயில்வே காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விசாரணையின்போது, அவா்கள் இருவரும் வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கான முகாமில் இருந்தவா்கள் என்பது தெரியவந்தது. சட்டவிரோதமாக திரிபுராவுக்குள் ஊடுருவிய அவா்கள் கொல்கத்தாவுக்கு ரயிலில் செல்ல திட்டமிட்டிருப்பதை ஒப்புக்கொண்டனா்.
திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் நடந்த மற்றொரு சோதனையில் 5 வங்கதேசத்தவா்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய இரண்டு இந்தியா்கள் காவல்துறையினரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கைது செய்யப்பட்ட இந்தியா்கள் இருவரும் ஆவணங்கள் இல்லாமல் ஊடுருவும் வங்கதேசத்தவா்களுக்கு உதவும் செயல்களில் ஈடுபட்டுள்ளனா் என எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்தாா்.