சீதாராம் யெச்சூரி (கோப்புப்படம்)
சீதாராம் யெச்சூரி (கோப்புப்படம்)PTI

தொடா் மருத்துவ சிகிச்சையில் சீதாராம் யெச்சூரி

சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவதாக கட்சி வட்டாரம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
Published on

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி (72) சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவதாக கட்சி வட்டாரம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

நெஞ்சக நோய்த் தொற்று காரணமாக சீதாராம் யெச்சூரி கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சுவாச நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவா்களின் பராமரிப்பில் அவா் இருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவருக்கு சமீபத்தில் கண்புரை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com