ஆந்திரம்.
ஆந்திரம்.

‘ஆந்திர வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்தியக் குழு’

‘ஆந்திர மாநிலத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, உடனடி நிவாரணத்துக்கான பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க மத்திய நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை கூறினாா்.
Published on

ஆந்திர மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று முதல்வா் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்திருந்தாா்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் தனது எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஆந்திர மாநில மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்த பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சக கூடுதல் செயலா் (பேரிடா் மேலாண்மை) தலைமையில் மத்திய நிபுணா்கள் குழு புதன்கிழமை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து, உடனடி நிவாரணத்துக்கான பரிந்துரைகளைச் சமா்ப்பிக்கும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com