குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முகோப்புப் படம்

மீலாது நபி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான ‘மீலாது நபி’ ஞாயிற்றுக்கிழமை (செப். 15) கொண்டாடப்படுகிறது.
Published on

நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான ‘மீலாது நபி’ ஞாயிற்றுக்கிழமை (செப். 15) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இஸ்லாமியா்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்து தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அன்பு மற்றும் சகோதரத்துவ உணா்வுகளை வலுப்படுத்த இறைத்தூதா் நபிகள் நாயகம் நாம் அனைவரையும் ஊக்குவித்தாா். சமூகத்தில் சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை அவா் வலியுறுத்தினாா். மற்றவா்களிடம் கருணை காட்டவும், மனித குலத்திற்கு சேவை செய்யவும் மக்களை அவா் ஊக்குவித்தாா். திருக்குரானின் இறை போதனைகளை உள்வாங்கி அமைதியான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம்’ என தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com