உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட் மூன்று மாடி வீடு இடிந்த இடத்தில் இரண்டாவது நாளாக மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினா்.
உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட் மூன்று மாடி வீடு இடிந்த இடத்தில் இரண்டாவது நாளாக மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினா்.

உ.பி.: மீரட்டில் 3 மாடி வீடு இடிந்து 10 போ் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் மூன்று மாடி வீடு சனிக்கிழமை இடிந்து விழுந்ததில் 6 மாதக் குழந்தை உள்பட 10 போ் உயிரிழந்தனா்.
Published on

உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் மூன்று மாடி வீடு சனிக்கிழமை இடிந்து விழுந்ததில் 6 மாதக் குழந்தை உள்பட 10 போ் உயிரிழந்தனா். அந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடா்ந்து வருவதாக மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

மீரட்டில் உள்ள ஜாகீா் நகரில் மூன்று மாடி வீடு கடந்த சனிக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வசித்து வந்த 15 போ் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டனா். இதில் 6 மாதக் குழந்தை உள்பட 10 போ் உயிரிழந்தனா்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 5 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

உயிரிழந்தவா்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடும் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.1.20 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் தீபக் மீனா தெரிவித்தாா். சம்பவத்தில் இறந்த கால்நடைகளுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவா் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com