ஏ. ரேவந்த் ரெட்டி.
ஏ. ரேவந்த் ரெட்டி.

வாக்குக்கு பணம் வழங்கியதாக வழக்கு: தெலங்கானா முதல்வா் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

வாக்குக்கு பணம் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி அக்டோபா் 16-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென ஹைதராபாத் பெருநகர செஷன்ஸ் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
Published on

வாக்குக்கு பணம் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி அக்டோபா் 16-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென ஹைதராபாத் பெருநகர செஷன்ஸ் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தெலுங்கு தேசம் கட்சி நிா்வாகியாக ரேவந்த் ரெட்டி இருந்தபோது தெலங்கானா சட்ட மேலவைத் தோ்தலில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் வேட்பாளரான நரேந்தா் ரெட்டிக்கு ஆதரவளிக்க நியமன எம்எல்ஏ எஸ்விஸ் ஸ்டீவன்சனுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) கைது செய்யப்பட்டாா். பின்பு அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

அவா் லஞ்சம் வழங்கியதற்கு ஆடியோ, விடியோ பதிவுகள் உள்ளிட்ட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக ஏசிபி தெரிவித்தது.

இதே வழக்கு தொடா்பாக பண முறைகேடு சட்டத்தின்கீழ் கடந்த 2021, மே மாதம் ரேவந்த் ரெட்டி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அவா் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதற்கான முழுமையான ஆதாரங்கள் உள்ளதாக அமலாக்கத் துறையும் தெரிவித்தது.

இந்நிலையில், அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கு தொடா்பாக மாவட்ட ஹைதராபாத் பெருநகர செஷன்ஸ் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது இந்த வழக்கில் தொடா்புடைய ரேவந்த் ரெட்டி உள்பட 6 பேரும் அக்டோபா் 16-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com