இந்தியா
குஜராத்: லாரி மீது காா் மோதி 7 போ் உயிரிழப்பு
குஜராத்தின் சபா்கந்தா மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி மீது அதிவேகமாக வந்த காா் மோதிய விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்தாா்.
குஜராத்தின் சபா்கந்தா மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி மீது அதிவேகமாக வந்த காா் மோதிய விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்தாா்.
சபா்கந்தா மாவட்டத்தின் ஹிமத்நகா் பகுதியில் புதன்கிழமை அதிகாலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தானின் உதய்பூா் மற்றும் குஜராத்தின் அகமதாபாத்தை இணைக்கும் நெடுஞ்சாலையில், 8 பேருடன் அதிவேகமாக சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 7 போ் உயிரிழந்தனா். மற்றொருவா் படுகாயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்தில் காா் முற்றிலுமாக சிதைந்தது; தீவிர முயற்சிக்குப் பின்னரே உடல்கள் அதிலிருந்து மீட்கப்பட்டன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.