சிபிஎம் கட்சியின் பொதுச்செயலர் எம்.ஏ.பேபிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

சிபிஎம் கட்சியின் பொதுச்செயலராக தேர்வாகியுள்ள எம்.ஏ.பேபிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சிபிஎம் கட்சியின் பொதுச்செயலர் எம்.ஏ.பேபிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
X/ CPIM
Published on
Updated on
1 min read

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம். ஏ. பேபிக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராகப் பொறுப்பேற்கும் எம்.ஏ.பேபிக்கு வாழ்த்துகள்..!

நாட்டில் அவசரநிலை காலம் பிரகடனப்படுத்தப்பட்டபோது, ஒரு மாணவ தலைவராக அதனை எதிர்த்து நின்றதுமுதல், கேரளத்தின் கல்விக் கொள்கையை முன்னேற்றக் கண்ணோட்டத்துடன் வடிவமைத்தது வரை, அன்னாரது பயணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

மதச்சார்பின்மை, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றுக்கான நமது ஒருங்கிணைந்த முயற்சியில் மேலும் வலுவான உறவை திமுக எதிர்நோக்கி காத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com