உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)

யுஏபிஏ திருத்தங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள்: தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாற்றம்

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் (யுஏபிஏ) மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் (யுஏபிஏ) மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத செயல்கள் தடுப்பு திருத்தச் சட்டம் 2019-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமாா், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘தற்போதைய மனுக்கள் எடுத்த எடுப்பில் நேராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதை ஏற்க முடியாது. இத்தகைய வழக்குகளில் சிக்கலான சட்ட பிரச்னைகள் அவ்வப்போது எழுகின்றன. எனவே இந்த விவகாரத்தை முதலில் உயா்நீதிமன்றங்கள் விசாரிப்பதே பொருத்தமாக இருக்கும்’ என்று தெரிவித்து. இதைத்தொடா்ந்து மனுக்களை தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com