ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தாக்கு ஒன்றில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரு வீரர்கள் மரணமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் பந்திப்போரா மாவட்டம் உலர் வியூபாயிண்ட் அருகே இன்று(ஜன. 4) பிற்பகல் ராணுவ வீரர்களுடன் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இதில் 5 வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் இருவர் உயிரிழந்தனர்.
இதையும் படிக்க | காற்றாடும் விமான நிலையங்கள்!
சிகிச்சை பெற்று வரும் 3 பேரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தற்போது ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பந்திப்போரா மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மஸ்ரத் இஃபால் கூறினார்.
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை இதேபோன்று ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் 5 வீரர்கள் உயிரிழந்தனர், 5 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.