கேஜரிவாலுக்கு எதிராக பர்வேஷ் வர்மா: பாஜக வேட்பாளர் பட்டியல்!

தில்லி பேரவைத் தேர்தலுக்காக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக...
கேஜரிவாலுக்கு களமிறங்கும் எதிராக
கேஜரிவாலுக்கு களமிறங்கும் எதிராக
Published on
Updated on
1 min read

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 29 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக இன்று (ஜன. 4) வெளியிட்டுள்ளது.

தில்லி சட்டப்பேரவையில் பதவிக்காலம் வருகிற பிப்ரவரி 23-ம் தேதி நிறைவடைகிறது. இதனால் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும்முன்பே, ஆம் ஆத்மி களத்தில் இறங்கும் வேட்பாளர் பட்டியலை மூன்று கட்டங்களாக அறிவித்து முடித்தது.

இந்த நிலையில் பாஜக முதல் கட்ட பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக புதுதில்லி தொகுதியில் முன்னாள் எம்பி பர்வேஷ் வர்மாவை நிறுத்தியுள்ளனர்.

தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருமான அதிஷி களமிறங்கிய கல்காஜியில் பாஜக சார்பில் முன்னாள் எம்பியான ரமேஷ் பிதுரியை நிறுத்தியுள்ளது.

பாஜகவின் தேசியப் பொறுப்பாளர்களான துஷ்யந்த் குமார் கௌதம் கரோல் பாக் தொகுதியிலும், ஜனக்புரியிலிருந்து ஆஷிஷ் சூத், காந்தி நகரிலிருந்து அரவிந்தர் சிங் லவ்லி வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலைவராக இருந்து, பாஜகவுக்கு சமீபத்தில் மாறிய கைலாஷ் கெலாட் பிஜ்வாசன் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

மேலும், தில்லி பாஜக முன்னாள் தலைவர் சதீஷ் உபாத்யாய் மாளவியா நகரில் போட்டியிடுகிறார்.

இதனிடையே ஒருபக்கம் ஆளும் ஆம் ஆத்மி கட்சி சஞ்சீவ்னி, மகிளா சம்மன் யோஜனா போன்ற திட்டங்களை அறிவித்துள்ளது. அதேநேரத்தில் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து மோசடி செய்வதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இன்னொரு பக்கம் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விகளைக் கூறி தலைநகர் அணுஉலையாக மாறியுள்ளதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com