ஆம் ஆத்மியின் ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்: பாஜக எம்பி

பாஜக ஆட்சிக்கு வந்தால் தில்லியை முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்தும்..
பாஜக எம்பி கமல்ஜீத்
பாஜக எம்பி கமல்ஜீத்
Published on
Updated on
1 min read

ஆம் ஆத்மி கட்சியின் கீழ் பத்தாண்டுக் கால பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர தில்லி மக்கள் தயாராக உள்ளனர் என்று பாஜக எம்பி தெரிவித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது, மேலும் 70 உறுப்பினர்களைக் கொண்ட பேரவைக்குத் தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆம் ஆத்ம கட்சியின் மீது பாஜக எம்பி கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக எம்பி கமல்ஜீத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தில்லி மக்கள் அடுத்த அரசை தேர்ந்தெடுக்கும் நாள் வந்துவிட்டது. பத்தாண்டுக் கால ஊழல் முடிவுக்கு வர உள்ளது. நேர்மையான நிர்வாகம் மற்றும் மக்ள் நலத்திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்த தில்லி மக்கள் இனி பாஜக மீது நம்பிக்கை வைப்பார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்கான தொலைநோக்கு பார்வை மற்ற மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பாஜக ஆட்சிக்கு வந்தால் தில்லியை முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்குமாறு தில்லி மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது, நல்லாட்சியைக் கொண்டுவருவதற்கும், மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், யமுனையை சுத்தப்படுத்துவதற்கும், மதுபானக் கொள்கையில் உள்ள ஊழலை அம்பலப்படுத்துவதற்கும் உங்கள் ஓட்டுகள் உதவும் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com