பெங்களூரு : பெங்களூரின் ஜலஹள்ளி கிராஸ் பகுதியில் பெற்ற மகளைக் கொன்ற பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட கங்கராஜு என்ற நபர் தனது வீட்டில் கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பித்து வெளியேறியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் தலைமறைவான குற்றவாளியை பிடிக்க தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிந்துள்ள காவல் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.