ம.பி. காங்கிரஸில் அதிருப்தியா? மறுப்பு தெரிவித்த கமல்நாத்!

ம.பி. காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி பற்றி..
கமல்நாத்
கமல்நாத்Center-Center-Delhi
Published on
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்குள் எந்தவித அதிருப்தியும் ஏற்படவில்லை, ஊகங்கள் ஆதாரமற்றவை என முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்தார்.

கமல்நாத் மற்றும் மாநிலங்களவை எம்பியுமான திகவிஜய் சிங் உள்ளிட்ட மூத்த கட்சி உறுப்பினர்கள் ஓரங்கட்டப்பட்டதாகவும், கட்சிக்குள் நடைபெறும் எந்த நிகழ்ச்சிக்கும் தன்னை மாநில பிரிவு தலைவர் ஜிது பட்வாரி ஆலோசிக்கவில்லை என்று கமல்நாத் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாகத் தகவல் வெளியான நிலையில், இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

இதுதொடர்பாக கமல்நாத் வெளியிட்ட செய்தியில்,

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் ஆட்சியைக் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகின்றனர்.

அரசியலமைப்பின் சிற்பி பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த இடமான மோவில் கட்சியின் கூட்டம் நிகழ உள்ளது. மாநில காங்கிரஸ் பிரிவு ஜனவரி 26 மோவில் பிரசாரம் நடத்த உள்ளனர். காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கட்சிக்குள் எந்த பிரிவினையும், வேறுபாடுகளும் இல்லை. மாநில அமைப்பைச் சரியான பாதையில் கொண்டு செல்ல அனைத்து காங்கிரஸார்களும் ஒன்றுபட்டுள்ளனர். சர்ச்சை என்ற கேள்விக்கு இடமில்லை. இதுதொடர்பாக ஊடகங்களில் அதிருப்தி ஊகங்கள் வெளியாகிறது என்று அவர் கூறினார்.

கடந்த 2023 நவம்பரில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த சட்டபேரவைத் தேர்தலில் தோல்வியைத் தொடர்ந்து, காங்கிரஸின் மத்திய தலைமையானது கமல்நாத்துக்குப் பதிலாக ஜிது பட்வாரியை புதிய மாநில பிரிவு தலைவராக நியமித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com