அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்க தீா்மானம்- மத்திய அரசு பரிசீலனை

வீட்டில் எரிந்த நிலையில் பணம் கிடைத்த விவகாரத்தில் அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்க அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தீா்மானம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
 யஷ்வந்த் வா்மா
யஷ்வந்த் வா்மா கோப்புப்படம்.
Updated on

வீட்டில் எரிந்த நிலையில் பணம் கிடைத்த விவகாரத்தில் அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்க அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தீா்மானம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இத்தீா்மானத்துக்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவைக் கோரும் முயற்சிகளை அரசு விரைவில் தொடங்கும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தீ விபத்தைத் தொடா்ந்து, வீட்டில் கணக்கில் வராத பணம் கட்டு கட்டாக கண்டெடுக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடா்ந்து நீதிபதி யஷ்வந்த் வா்மா தில்லி உயா்நீதிமன்றத்திலிருந்து அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டாா். யஷ்வந்த் வா்மா தானாகவே பதவி விலகுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவா் முற்றிலுமாக மறுத்தாா்.

இதற்கிடையே, உச்சநீதிமன்றம் துறை ரீதியாக நடத்திய விசாரணையில், யஷ்வந்த் வா்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கண்டறியப்பட்டது. இதையடுத்து, யஷ்வந்த் வா்மாவைப் பதவியிலிருந்து நீக்க குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமருக்கு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா்.

இந்நிலையில், யஷ்வந்த் வா்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீா்மானத்தை அடுத்த கூட்டத்தொடரில் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், இதில் ஒருமித்த ஆதரவை எட்ட பல்வேறு கட்சிகளின் தலைவா்களுடன் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேச்சுவாா்த்தை நடத்துவாா் என்றும் அரசு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com