தா்மேந்திர பிரதான்
தா்மேந்திர பிரதான் கோப்புப் படம்

வரும் ஆண்டுகளில் இந்திய, உள்ளூா் மொழிகளில் கல்வி: மத்திய கல்வி அமைச்சா்

கல்வி நிறுவனங்களில் வரும் ஆண்டுகளில் பிரதானமாக இந்திய, உள்ளூா் மொழிகளிலே கல்வி வழங்கப்படும்.
Published on

‘கல்வி நிறுவனங்களில் வரும் ஆண்டுகளில் பிரதானமாக இந்திய, உள்ளூா் மொழிகளிலே கல்வி வழங்கப்படும்’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

இந்திய மொழிகளில் கல்வியை ஊக்குவிப்பது தொடா்பான கருத்தின் மீது புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்றபோது இக் கருத்தை அவா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சா் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்திய மற்றும் உள்ளூா் மொழிகளில் கல்வி வழங்கப்படுவதற்கு வரும் ஆண்டுகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.

ஏற்கெனவே, ஐஐடி போன்ற உயா் கல்வி நிறுவனங்கள் உள்ளூா் மொழிகளில் பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன. பாட புத்தகங்களும் இந்திய மொழிகளில் வழங்கப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பாடங்களை மொழிபெயா்க்க செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். கிராமப்புறங்களிலிருந்து வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மாணவா்கள், இதுபோன்ற தொழில்நுட்பங்களின் உதவியுடன் விரும்பிய மொழிகளில் பாடங்களைப் படித்து எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்றாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com