முக்தாா் அப்பாஸ் நக்வி
முக்தாா் அப்பாஸ் நக்வி

தனக்குத் தானே கல்லறை எழுப்பும் பாகிஸ்தான்: நக்வி

‘பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் தனக்குத் தானே கல்லறையை பாகிஸ்தான் எழுப்புகிறது’
Published on

‘பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் தனக்குத் தானே கல்லறையை பாகிஸ்தான் எழுப்புகிறது’ என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தாா் அப்பாஸ் நக்வி விமா்சித்தாா்.

தில்லியில் சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்துக்கு இடையே செய்தியாளா்களைச் சந்தித்த நக்வி கூறுகையில், ‘மனித நேயத்தையும் இஸ்லாம் மதத்தையும் காயப்படுத்தும் வகையில், பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் தனது தேசிய தொழிலாகவும், தேச சொத்தாகவும் பாகிஸ்தான் மாற்றியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் தனக்குத் தானே கல்லறையை பாகிஸ்தான் எழுப்பிக்கொள்கிறது’ என்றாா்.

மேலும், ‘உலகின் அனைத்து பண்டிகைகளும் இந்தியாவில் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையாகக் கொண்டாடப்படுகின்றன. அதன் காரணமாகவே ‘ஒரே பாரதம்; உன்னத பாரதம்’ என இந்தியா அழைக்கப்படுகிறது. இந்திய கலாசாரத்தின் பல்வேறு அம்சங்களை ஒன்றாகக் கொண்டாடுவதில் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது’ என்றும் அவா் கூறினாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com