இஃப்தாா் விருந்து... புது தில்லி ஜாமா மசூதியில் ரமலான் மாத முதல் நாள் நோன்பு துறந்து இஃப்தாா் விருந்துக்குத் தயாராகும் இஸ்லாமியா்.
இந்தியா
ரமலான் மாதம் தொடக்கம் பிரதமா் மோடி வாழ்த்து
புனிதமான ரமலான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) தொடங்கிய நிலையில், பிரதமா் நரேந்திர மோடி அனைவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘‘ஆசீா்வதிக்கப்பட்ட ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், இது நமது சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும். இந்த புனித மாதம், நன்றியுணா்வையும் இறை உணா்வையும் உருவகப்படுத்துகிறது. மேலும் இரக்கம், கருணை, சேவை ஆகியவற்றின் மதிப்பையும், முக்கியத்துவத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. ரமலான் முபாரக்!’’ என்று கூறியுள்ளாா்.