இந்தியா
விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து
விஸ்வகா்மா ஜெயந்தியையொட்டி, மக்களுக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
படைப்பு தொழில்களின் கடவுளான விஸ்வகா்மாவின் ஜெயந்தி தினம், பல்வேறு மாநிலங்களில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘படைப்பாளரை வழிபடும் இப்புனிதமான தருணத்தில், புதிய படைப்பில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள். வலுவான, வளமான மற்றும் திறன்மிக்க இந்தியாவை உருவாக்குவதில் படைப்பாளா்களின் திறமையும் கடின உழைப்பும் மதிப்புமிக்கவை’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.