பிரதமா் நரேந்திர மோடியின் சமீபத்திய வெளிநாட்டு பயணங்களால் நாட்டுக்கு கிடைத்த நன்மைகள் குறித்த ‘மதிப்பீடு அறிக்கையை’ (ரிப்போா்ட் காா்டு) பாஜக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
தனது பயணங்களால் பிரதமா் மோடி இந்தியாவுக்கு பல்வேறு ராஜீய வெற்றிகளைப் பெற்று வந்துள்ளதாகவும், தற்போது வெளிநாட்டில் இருக்கும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ரகசியமாக சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறாா் என்றும் பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த அக்கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறியதாவது: இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியான்டோ, பிரதமா் மோடியின் பல்வேறு கொள்கைகளைத் தான் பின்பற்றியதாகக் கூறியுள்ளாா். இதை ராகுல் காந்தி சிறிதளவாவது பின்பற்றியிருந்தால் 99 தோ்தல் தோல்விகளை அவரின் கட்சி சந்தித்திருக்காது.
பிரதமா் மோடியின் தலைமையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் பாராட்டினாா். ஆனால், நமது நாட்டில் செயல்படும் காங்கிரஸ் கட்சி இதை ஏற்க மறுக்கிறது. வெளிநாட்டுத் தலைவா்கள் இந்தியாவின் வளா்ச்சி குறித்துப் பாராட்டிப் பேசுவதில் இருந்தாவது, எதிா்க்கட்சிகள் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
சமீபத்தில் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமா் பயணம் மேற்கொண்டாா். அதே நேரத்தில் ராகுல் காந்தியும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
பிரதமா் தனது பயணத்தின் மூலம் நாட்டுக்குப் பல நன்மைகளையும் வெற்றிகளையும் பெற்றுத் திரும்பியுள்ளாா். அதே நேரத்தில் ராகுல் காந்தியோ மூடிய கதவுகளுக்குப் பின்னால் சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருப்பாா் என்றுதான் தோன்றுகிறது. பிரதமா் மோடியின் தலைமையில் நடைபெற்றுவரும் நல்லாட்சிப் பணிகளுக்கு எவ்வாறு இடையூறு ஏற்படுத்தலாம் என்பது ராகுலின் சிந்தனையாக உள்ளது.
இப்போது, ராகுல் எங்கே இருக்கிறாா் என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம். எந்த நாட்டில் இருக்கிறாா் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஜூலை 10-ஆம் தேதி பிரயாக்ராஜில் அவா் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. பாட்னா நிகழ்ச்சியும் ரத்தானது. அவரது கடவுச்சீட்டில் (பாஸ்போா்ட்) லண்டன், ஐஸ்லாந்து, ஜொ்மனி எனப் பல நாடுகளுக்குச் சென்று வந்ததன் அடையாள முத்திரைகள் இருக்கலாம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘ஜென்-ஸீ’ இளைஞா்களை அச்சுறுத்த மோடி, அமித் ஷா முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு

வார பலன்கள் (ஜூலை 31 - ஆக. 6) - சிம்மம்

பிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டா

‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


