கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வட மாவட்டங்களில் இன்று காலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
கேரள மாநிலத்தில் ஜூன் 4-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.
கோழிக்கோடு மாவட்டத்தின் நகர்ப்புற மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை பாதிப்புகளை ஏற்படுத்தியது. கோழிக்கோடு நகரின் கடற்கரைச் சாலைப் பகுதி உள்பட பல இடங்களில் உள்ள சாலைகள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் செயல்படும் பல உணவகங்களும் பாதிப்புக்குள்ளாகின.
திருச்சூர் மாவட்டத்தில், மட்டாத்தூர் கிராமப் பஞ்சாயத்துக்கு உள்பட்ட அரேஸ்வரம் பகுதியில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்ததையடுத்து, அங்கிருந்த ஐந்து குடும்பங்களை உள்ளூர் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமிற்கு அதிகாரிகள் மாற்றினர்.
பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பருவமழை தொடர்ந்து தீவிரமாக இருப்பதால், பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Heavy rains accompanied by strong winds lashed several parts of Kerala on Tuesday, particularly in the northern districts, leading to widespread waterlogging and prompting precautionary evacuation measures in some areas.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் இன்று 4, நாளை 3 மாவட்டங்களில் கனமழை!

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை!

6 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!

நீலகிரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




