மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

கிளிஞ்சல்கள் சேகரிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கடலில் மூழ்கி பலி!

கர்நாடகத்தில் கடல் பகுதியில் கிளிஞ்சல்கள் சேகரிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.

News image

சித்திரிப்பு

Updated On :24 மே 2026, 10:42 pm IST

கர்நாடகத்தில் கடல் பகுதியில் கிளிஞ்சல்கள் சேகரிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.

கர்நாடகத்தின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள அல்வெகோடி முகத்துவாரப் பகுதியில் கிளிஞ்சல்கள் சேகரிக்க பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் ஒன்றாகச் சென்றனர்.

அங்கு திடீரென கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் எழுந்த ராட்சத அலையில் சிக்கி அவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதில், பலியான 8 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் 2 பேரின் உடல் தேடப்பட்டு வருகின்றது. மூன்று பெண்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சரதஹோலே ஹரிஹிட்லு கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

வானிலை மாற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக இருந்ததாக அங்குள்ளோர் தெரிவித்தனர். மேலும், இந்த வாரத் தொடக்கத்தில் மீனவர்களையும் பொதுமக்களையும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

தீயணைப்புத் துறையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் மீனவர்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் சித்தராமையா, இந்தச் சம்பவம் தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

Summary

Eight of family drown in Alvekodi estuary while collecting bivalves in Karnataka

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.