நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி! மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல் திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!
/

நவி மும்பை நெடுஞ்சாலையில் சொகுசுப் பேருந்தில் தீ விபத்து

நவி மும்பை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

News image

தீ விபத்தில் சிக்கிய சொகுசுப் பேருந்து. - Photo grab ANI video.

Updated On :24 மே 2026, 5:32 pm IST

நவி மும்பை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் நெடுஞ்சாலையில் 22 பயணிகளுடன் சென்ற சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்தது. எனினும், இதில் அனைவரும் காயமின்றி தப்பினர் என்று தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்ஜினிலிருந்து புகை வருவதைக் கண்ட ஓட்டுநர், பேருந்தை உடனடியாக சாலையோரம் நிறுத்தி, பயணிகளை வெளியேறுமாறு எச்சரித்தார் என்று தீயணைப்பு நிலைய அதிகாரி யு.பி. அக்ரே கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இரண்டு தீயணைப்பு வாகனங்களும் ஒரு தண்ணீர் டேங்கரும் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதன் பிறகு குளிர்விக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

Summary

A luxury bus with 22 passengers on board caught fire on a highway in Maharashtra's Thane district on Sunday afternoon, with all occupants escaping unharmed, a fire official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.