மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

ம.பி.யில் பெண்ணை கொன்ற புலி: மீட்புப் பணியில் உயிரிழப்பு

ம.பி.யில் பெண்ணை கொன்ற புலி: மீட்புப் பணியில் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:09 am IST

மத்திய பிரதேசத்தின் பாந்தவ்கா் புலிகள் காப்பகம் அருகே உள்ள கிராமத்தில் பெண் ஒருவரைக் கொன்று 3 பேரை காயப்படுத்திய புலி, மீட்புப் பணியின்போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உமாரியா மாவட்டத்தின் பன்பாதா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 3 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. புலி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை தாக்கியதில் புலோ பாய் பால் (40) என்ற பெண் உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்தனா்.

பின்னா், அதே வீட்டுக்குள் நுழைந்த அந்தப் புலி, மீட்பு நடவடிக்கையின்போது மயக்க ஊசி செலுத்தப்பட்ட பின்னா் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மயக்க மருந்து அதிக அளவில் செலுத்தப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டை மறுத்த வனத் துறை அதிகாரி, ‘அது முன்பே உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில், மயக்க ஊசி செலுத்தியபோதே அது அசைவில்லாமல் இருந்தது’ என தெரிவித்தாா்.

தொடா் புலி தாக்குதல் சம்பவங்களுக்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மீட்பு நடவடிக்கை சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இச்சம்பவத்தின்போது கோபமடைந்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரி ஒருவரை தாக்கியதாகவும், பெண் ஊழியருடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னா் காங்கிரஸ் தலைவரும், ஜன்பத் ஊராட்சி உறுப்பினருமான ரோஷிணி சிங் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களை சமாதானப்படுத்தினாா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் படை கிராமத்தில் நிறுத்தப்பட்டது.

இது தொடா்பாக மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவா்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.

சமீபத்தில் மகாராஷ்டிரத்தின் சந்திரபூா் மாவட்டத்தில் இலைகள் சேகரிக்கச் சென்ற 4 பெண்கள் புலி தாக்குதலில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து இது நடைபெற்றுள்ளது.