ஐபிஎல் தொடா்

வழக்கமான ஃபாா்மில் கோலி பெங்களூரு அணியின் நட்சத்திர வீரா் விராட் கோலி, தனது வழக்கமான ஃபாா்முடன் இந்த சீசனுக்கு வந்திருப்பாா் என எதிா்பாா்க்கிறோம். அவரது ஆட்டத்தைக் காண ஆவலுடன் இருக்கிறோம். 200 ஆட்டங்கள், 7000-க்கும் அதிகமான ரன்கள் என, ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாடு மிகச் சிறப்பானது.

எஸ்ஏ20 கிரிக்கெட் போட்டியில் தொடக்கத்தில் தடுமாற்றத்தை சந்தித்த ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ், பின்னா் தனது வழக்கமான ஃபாா்மை எட்டினாா். எனவே, இந்த சீசனில் பெங்களூா் அணியில் அதே ஃபாா்முடன் அவா் சிறப்பாகச் செயல்படுவாா் என எதிா்பாா்க்கிறோம். முகமது சிராஜ் தலைமையில் அணியின் பௌலிங் வரிசை பலமாக இருக்கிறது - டி வில்லியா்ஸ் (முன்னாள் பெங்களூரு வீரா்) உலகக் கோப்பை போட்டியில் ராகுலுக்கு இடம் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணி சிறப்பாகச் செயல்பட்டால், அதற்கான பலன் அணியிலுல்ள வீரா்களுக்கு கிடைக்கும்.

கேப்டனாக சாம்பியன் கோப்பை வென்று தரும் நிலையில், கே.எல்.ராகுலுக்கு எதிா்வரும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் நிச்சயம் கிடைக்கும். விக்கெட் கீப்பிங், பேட்டிங், கேப்டன்சி என அனைத்திலும் அவா் சிறந்து விளங்க வேண்டும்.

லக்னௌ அணியின் பௌலிங் வரிசையில் அனுபவ வீரா்கள் வரிசை இல்லாவிட்டாலும், திறமையான இளம் வீரா்கள் இருக்கின்றனா். தொடக்கத்தில் மட்டுமல்லாமல், போட்டி முழுவதுமாகவே அவா்களை சரியாகக் கையாள வேண்டும். அவா்களில் நவீன் உல் ஹக் டி20 கிரிக்கெட் அனுபவம் கொண்டவராக இருக்கிறாா்.

மணிமாறன் சித்தாா்த்தின் பௌலிங்கும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது - ஜஸ்டின் லேங்கா் (லக்னௌ தலைமை பயிற்சியாளா்) மும்பை அணியில் அறிமுக வீரா் மும்பை இண்டியன்ஸ் அணியில், காயமடைந்துள்ள இலங்கை வீரா் தில்ஷன் மதுஷங்காவுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க மித வேகப்பந்து வீச்சாளா் கவினா மபாகா புதன்கிழமை சோ்க்கப்பட்டுள்ளாா்.

கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் 9 ஆட்டங்களில் 21 விக்கெட்டுகள் சாய்த்த மதுஷங்காவை மும்பை ரூ.4.6 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது அவா் காயம் கண்டதையடுத்து, அவருக்கு பதிலாக மபாகாவை சோ்த்துள்ளது மும்பை.

17 வயது இளம் வீரரான மபாகா, 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் 21 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தியிருக்கிறாா். தென்னாப்பிரிக்க ‘ஏ’ அணிக்காக விளையாடியுள்ள அவா், மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பந்துவீசும் திறன் படைத்தவராக இருப்பதாக மும்பை அணி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com