ஆச்சரியமூட்டும் அறிவியல்!

Rene Descartes என்னும் ஃபிரெஞ்சு தத்துவஞானி, I think therefore I am என்கிறார். இருத்தல் என்பதை நிறுவுவதே சிந்தனைதான். சிந்தனை என்பதே பெரும்பான்மை கேள்வி - பதில்தான். ஆதி மனிதனுக்கும் நமக்கும் இந்தக் கேள்விகள்தான் சிந்தனைத் தொடர்ச்சி. அப்படி நாம் அன்றாடம் பார்க்கின்ற காட்சிகள், பொருட்கள் போன்றவற்றின் மீதான கேள்விகள் வெகு சுவாரசியமானவை. சிறியவற்றுக்குப் பின் பெரிய பிரிமிப்புகளும், பெரியவற்றுக்குப் பின்புலமாக எளிமையான விஷயங்களும் இருக்கும்.

அப்படி நாம் நிதம்நிதம் பார்க்கிற, கடந்து வருபவற்றின் பின்னிருக்கும் அறிவியலை, சுவாரசியமான விளைவுகளை பற்றிச் சொல்லலாம் என்று இருக்கிறேன். காடு முதல் கம்ப்யூட்டர் வரை, அப்படியே இயற்பியல், வேதியியல், உயிரியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் என்று ஒரு ஜுகல்பந்தியாக, கதம்பசாதமாக இந்தத் தொடர் இருக்கும். கவலைப்படாதீர்கள். நிச்சயம் போர் அடிக்கமாட்டேன். வெறும் தியரியாகப் பேசினால் தூங்கி விழுகிற ஆள் நான். அந்தக் கஷ்டம் எனக்கும் புரியும். வெறுமனே சமன்பாடுகள், தேற்றங்கள் என இழுத்தடிக்காமல் சுவாரசியமாகப் பார்க்கலாம்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை