சுடச்சுட

  
  tomato

  இரு நாட்களுக்கு முன்னர், சென்னையில் ரயில் நிலையத்தில் பலர் கண் முன்னே ஒரு இளம் பெண் கொல்லப்பட்டார். அவர் கணினிப் பொறியியலாளர். உடனடியாகவே சமூக வலைத்தளங்களில் மீம்கள் பரவ ஆரம்பித்துவிட்டன. நம் சமுதாயப் பொறுப்பின்மை அதிகமாகிவிட்டது. சமுதாயத்தில் சுயநலம் அதிகரித்துவிட்டது இத்யாதி… இத்யாதி…

  ஒரு மார்க்ஸிஸ்ட் இதனை வேறுவிதமாகப் பார்த்திருப்பார். முதலாளித்துவ சமுதாயத்தில், பல அடுக்குகள் கொண்ட சமுதாயத்தில் வாழும்போது தம்முடைய மானுட சாராம்சத்திலிருந்து ஒரு மனிதன் அந்நியப்பட்டுவிடுகிறார் என காரல் மார்க்ஸ் கருதினார். மார்க்ஸியம் இதை அந்நியப்படுதல் எனச் சொல்கிறது. ஒரு சக மனிதன் தன் கண் முன்னால் படுகொலை செய்யப்படும்போது  அல்லது கொடுமைப்படுத்தப்படும்போது அதைத் தட்டிக் கேட்காமல், அதில் தலையிடாமல் இருப்பது இவ்வாறு அந்நியப்படுதலின் விளைவு என காரல் மார்க்ஸ் சொல்லியிருக்கக்கூடும்.

   

  1964 மார்ச் மாதம் 13-ம் தேதி, கிட்டி ஜினோவீஸ் (Kitty Genovese) என்கிற இளம்பெண் அவளது அபார்ட்மென்ட்டில் கொல்லப்பட்டாள். அவள் உதவிக்காகக் கூக்குரல் எழுப்பியும் எவரும் அவளுக்கு உதவவில்லை. நியூயார்க் டைம்ஸ் உட்பட பல நாளேடுகள், 37 அல்லது 38 பேர்கள் அவளது தாக்குதலுக்கோ அல்லது அவளது உதவிக்கான கூக்குரலுக்கோ சாட்சிகள் என்றும், ஆனால் அவர்கள் எவருமே அவளுக்கு உதவிக்கு வரவில்லை என்றும் எழுதின. ஆனால், ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் 2016-ல் அதே நியூயார்க் டைம்ஸ் 38 சாட்சிகள் வாளாவிருந்தனர் என்பது மிகைப்படுத்துதல் எனக் கூறியது.

  எதுவானாலும், கிட்டியின் கொலை அமெரிக்க சமுதாயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சக மனிதர் கொல்லப்படும்போது ஏதும் செய்யாமல் இருக்கும் மனநிலை ஏன் நிலவுகிறது?

  ஜான் டார்லே (John Darley) மற்றும் பிப் லடானே (Bibb Latané) எனும் இரு சமூக உளவியலாளர்கள், இச்செயலின்மையின் உளவியல் காரணங்களை ஆராய முடிவு செய்தார்கள். நம் மதிப்பீடுகளின் வீழ்ச்சிதான் இதற்குக் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணிகள் இருக்கலாமா?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai