Enable Javscript for better performance
பகுதி - 8 டமால்... டுமீல்...- Dinamani

சுடச்சுட

  


  கணவனுடன் கசமுசா இல்லை என்று தெரிவிக்க, அவரோடு செல்ஃபி எடுத்து முகநூலில் போடுகிறார்களாம்.

  Selfie help is the best help போலிருக்கு.

  ***

  சத்யம் ராமலிங்க ராஜூ, சிறையில் கைதிகளுக்கு கணினி பாடம் எடுப்பாராம்…

  ‘எஸ்கேப்’ பட்டனை உபயோகிப்பது பற்றி முதல் பாடம் அமையுமா?

  ***

  ஜப்பானில் கணவன் உபயோகித்த டாய்லெட்டில் நாற்றம் தாங்காமல் கத்தியால் குத்திய மனைவி.

  ‘மணம்’புரிந்தவரை இப்படிச் செய்யலாமா?

  ***

  முடி வெட்டுபவர்களே மகிழ்ச்சியுடன் தொழிலில் ஈடுபடுகிறார்களாம்.

  இதைப் பாராட்டி, வெள்ளைத் துணிக்கு பதில் மரியாதையாகப் பொன்னாடையை போர்த்த வேண்டும்.

  ***

  100 வயதான அமெரிக்கர், கோடாலியால் 88 வயதான மனைவியைக் கொன்று தற்கொலை செய்து கொண்டார்.

  எங்கே சிரஞ்சீவிகளாக ஆகிவிடுவோமோ என்கிற மிரட்சியால் இருக்குமோ?.

  ***

  ஒபாமாவுக்கு தினம் டிவி சீரியல் பார்ப்பதில் கொள்ளை ஆசையாம்.

  ஆப்ரகாம் லிங்கன் காலத்தில் ஆரம்பமான அமெரிக்க சீரியலா?

  obama_tv1.jpg 

  ***

  ராகுவும் கேதுவும் சகோதரர்களாம். ராகு அண்ணன், கேது தம்பி.

  ஆனால் ராகு(வுக்கு) காலம் வந்ததுபோல், கேது(வுக்கு) காலம் வராதது, கேதுவின் போறாத காலம்.

  ***

  டிராபிக் ராமசாமி, வரதட்சணை வாங்க மறுத்ததால் அவரது தந்தை கல்யாணத்தை புறக்கணித்தாராம்.

  கோபித்துக்கொண்ட அப்பா, காசி யாத்திரைக்கு கிளம்பிவிட்டாரா?

  ***

  அமராவதியை ஆந்திராவின் தலைநகராக சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.

  இந்திராவுக்கு ஒரு அமராவதி. சந்திராவுக்கும் ஒரு அமராவதியா?

  ***

  விமானச் சக்கரத்தில் மறைந்து இரண்டு மணி நேரம் பறந்து வாலிபர் கைது.

  பப்ளிசிட்டிக்காக இப்படியா பறப்பதா?

  ***

  சீன எழுத்தாளர் ஸாங் யியி, கோடிகள் செலவழித்து ஷேக்ஸ்பியரைப்போல் உருவத்தை மாற்றிக்கொண்டார்.

  As you like it என்று அவரது மனைவி கடுப்புடன் கைகழுவிவிட்டாரா?

  ***

  ஏமன் நாட்டில் இருந்து தப்பி வந்த பிறந்து ஆறே நாளான பெண் சிசு.

  எமன் பிடியிலிருந்து தப்பிய இக் குழந்தை எமனுக்கு எமன்தான்.

  ***

  ‘எலி’ படத்தில் வடிவேலு, ஜாக்கி சான் ஸ்டைலில் சண்டை போடுகிறாராம்.

  நடிகர் வடிவேலு, சிரிப்பு வெடிவேலாக மாறி தற்போது அடிவேலா?

  vadivelu.jpg 

  ***

  நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ரூ.2 லட்சம் தர  நீதிமன்றம் உத்தரவு.

  இனி, தெரு நாயைப் பார்த்தால், ‘கொஞ்சம் கடிங்க பாஸ்!’ என்று கெஞ்சுவார்களா?.

  ***

  தொடர்ந்து சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஆண்மைத் தன்மை குறைந்துவிடுமாம்….

  லேடீஸ் சைக்கிளை ஓட்டினால்?

  ***

  எமனின் மனைவியின் பெயர் ஐயோ.

  ஐயோ பாவம் எமன்!

  ***

  60 பெண்களைப் பெற்று ஆண்டி ஆவாய் என்கிற சாபத்தால், நாரதருக்குப் பிறந்த பெண்களுக்கு 60 ஆண்டுகளின் பெயராம்.

  அத்தனையையும் ஞாபகம் வைக்கமுடியாமல் ‘நா-ராயணி! நா-ராயணி!’ என்று பொதுவாக குரல் கொடுத்துக்கொண்டிருந்தாரா?

  ***

  அமெரிக்க புத்தகக் கடைகளில் அதிகம் திருடப்படும் புத்தகம், பைபிள்.

  அதைப் படித்தவர்கள் திருடமாட்டாரகள். ஆகவே, திருடுபவர்கள் அதைப் படித்திருக்கமாட்டார்கள் போலிருக்கு,

  ***

  தாய்லாந்து மன்னர் முடிசூட்டு விழாவில் திருப்பாவை பாடப்படுகிறதாம்…

  ஆண்டாண்டுகளாக ஆள ஆண்டாளின் அருள் கிட்டவா…

  ***

  குடித்துவிட்டு வரும் மணவர்களை, கல்லூரி டிஸ்மிஸ் செய்யலாம் - சென்னை உயர்நீதி மன்றம்.

  பின்னே, மாணவர்கள் குடித்துவிட்டா வருவது? படித்துவிட்டுத்தானே வர வேண்டும்.

  ***

  ஈர்ப்புடைய சிறுகதைகளைத் தந்த ஜெயகாந்தன் சமீபத்தில் மறைந்தார்.

  அவர் எழுத்துக்களில் இருந்தது வெறும் காந்தம் அல்ல, ஜெயகாந்தம்!

  jayakanthan2.jpg 

  ***

  10 வருடங்கள் ஓடிய டீசல் வாகனங்களுக்குத் தடை.

  இனி, டீசல் வண்டிகள் ஈசலாகப் பெருகாது.

  ***

  கேரளாவில் கடலை விற்று பொறியியல் படிக்கும் மாணவர்.

  சபாஷ்! பெண் குட்டிகளுடன் கடலை போடாமல், கடலை விற்றுப் படிக்கிறாரே!

  ***

  நெதர்லாந்து முதியோர் காப்பகத்தில், கல்லூரி மாணவர்கள் இலவசமாகத் தங்கி அவர்களுக்கு உதவுகிறார்களாம்.

  ‘வானவில்லைப்போல வரும் வாலிபம் போனபின் திரும்பி வராது’ என்று உணர இது வாய்ப்பல்லவா?

  ***

  சிறுநீரை முகர்ந்து பார்த்து, ஆண்களின் ப்ராஸ்டேட் கேன்ஸரை நாய்கள் கண்டுபிடித்துவிடுமாம்.

  CAT scan மாதிரி இது DOG scan போலிருக்கு.

  ***

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai