நாகூர் ரூமி

இயற்பெயர் முஹம்மது ரபி. புனைபெயர்: நாகூர் ரூமி. கல்வித்தகுதி: எம்.ஏ., பிஎச்.டி., கம்பன் - மில்டன் காவியங்களில்

யற்பெயர் முஹம்மது ரபி. புனைபெயர்: நாகூர் ரூமி. கல்வித்தகுதி: எம்.ஏ., பிஎச்.டி., கம்பன் - மில்டன் காவியங்களில் ஒப்பாய்வுக்காக, சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்டம்.

கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், சுயமுன்னேற்றம், மதம், ஆன்மிகம், வாழ்க்கை வரலாறு, தமிழாக்கம் என 43 நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம்’ நூலுக்கு 2004-ம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும், ஹோமரின் ‘இலியட்’ காவிய மொழிபெயர்ப்புக்கு 2009-ம் ஆண்டுக்கான நல்லி திசையெட்டும் மொழியாக்க விருதும் கிடைத்தது. கணையாழி தொடங்கி கல்கி, விகடன், குமுதம் என எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதியுள்ளார். இணையத்திலும் எழுதுகிறார். www.nagorerumi.com என்ற இவரது வலைத்தளத்திலும் இவரது ஆக்கங்களைப் படிக்கலாம்.

ஆம்பூர், மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றும் இவர், சென்னையில் பல ஆண்டுகளாக ஆல்ஃபா தியான வகுப்புகளை நடத்தி வருகிறார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கருத்துகளைப் பரிமாறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com