செல்லுலாய்ட் சிறகுகள்

ஏதாவது ஒரு விதத்தில் பரபரப்பாக கவனிக்கப்பட்ட படங்களைப் பற்றி பேசலாம். தடை செய்ய முயன்ற படங்கள், மிரட்டல்களைச் சந்தித்த படங்கள், விருதுகள் வாங்கிய படங்கள் என்று வகைதொகை இல்லாமல் பேசலாம். ஹாலிவுட், டோலிவுட், மாலிவுட் என்ற எந்த வரையறையும் இல்லை. கமர்ஷியல் படம், உலகப் படம், கலைப் படம் என்கிற பாகுபாடுகளும் இல்லை. கேமராவை அந்தக் கோணத்தில் வைத்திருக்க வேண்டும், அந்த மூன்றாவது காட்சியில் பியானோவின் ஒலி குறைவாக இருந்திருக்க வேண்டும் என்கிற டெக்னிக்கல் சமாசாரங்களும் இல்லை. நாயகன் அணிந்திருந்த சட்டை ஒரு குறியீடு, தேநீர்க் குடுவையின் நிறம் ஒரு குறியீடு என்கிற பயமூட்டும் விவகாரங்கள் இல்லை. ‘இந்தப் படத்தை பார்த்தேன்... இதில் இருந்து என்ன புரிந்துகொண்டேன்...’ என்று திண்ணையில் உட்கார்ந்து பக்கத்து வீட்டு நண்பனிடம் உரையாடுவது போன்ற தொனியில் இந்தக் கட்டுரைகள் இருக்கும். அதுதான் நோக்கம். முக்கியமான படங்கள் என விவாதிக்கப்படுகிற படங்களைப் பற்றி தமிழில் ஒரு குறுக்குவெட்டுப் பார்வை. அதுதான் திட்டம்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை