நேர்முகத் தேர்வு

இன்றைய இளைஞர்களுக்கு வேலை தேடுவது என்பது கற்கால மனிதனின் வேட்டையைப் போன்ற ஒரு சாகஸமாகவே ஆகிவிட்டது. மான் எதிரில் இருக்கிறது. கையில் அம்பும் இருக்கிறது. மானைக் கொல்வதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். அம்பு மட்டும் இருந்தால் போதுமா? மானை வீழ்த்த சாதுரியம் வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம். இதே சக்ஸஸ் ஃபார்முலாதான், வேலைக்கான வேட்டைக்கும். அம்பைப்போல் கல்வித் தகுதியை வைத்துக்கொண்டு, வேலை என்ற மானை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று இன்றைய இளைஞர்கள், குறிப்பாக புதிய பட்டதாரிகள் பாவம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வேட்டையின் முக்கிய அம்சமே நேர்முகத் தேர்வுதான். அப்படிப்பட்ட நேர்முகத் தேர்வு என்ற இலக்கை/ஒற்றைக் கதவை எப்படி எட்டுவது/ஓங்கித் திறப்பது என்று எளிமையாகப் புரியவைக்கும் முயற்சிதான் இந்த நேர்முக(க்கிய)த் தேர்வு என்ற தொடர். வெற்றி பெற வாழ்த்துகள்.

சுரேகா

சுரேகா

சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், எழுத்தாளர், தொழில் ஆலோசகர் என்ற பன்முகத் திறமை கொண்டவர். எளிய வார்த்தைகள் மூலம் கல்வி, தொழில் ஆகியவற்றில் உள்ளங்களில் மாற்றம் கொண்டுவரமுடியும் என்று நம்புபவர். பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் புதிய, பிரபல தொழில் நிறுவனங்களின் நிரந்தர ஆலோசகர். இதுவரை 5 நூல்கள் எழுதியுள்ளார். தமிழில் முதல் தொழில் நாவல் எழுத்தாளர் (Business Novelist) என்ற பெயருக்குச் சொந்தக்காரர். சுவாரஸ்யமான எழுத்துநடை இவரது பலம்!

நேர்முக்கியத் தேர்வு

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை