36. அசலாக வளருங்கள்

தங்கள் பிள்ளைகள் என்னவாக வேண்டும் எனும் இலட்சியமும், கனவும் பெற்றோருக்கு இயல்பானவை.
36. அசலாக வளருங்கள்


தங்கள் பிள்ளைகள் என்னவாக வேண்டும் எனும் இலட்சியமும், கனவும் பெற்றோருக்கு இயல்பானவை. அவசியமானதும் கூட. ஆனால் அவர்கள் தொழிலில் எந்த இடத்தை அடைய வேண்டும், என்ன தொழில் வல்லுநராக அமைய வேண்டும் என்பதை பெற்றோரின் கனவுகள் மட்டுமோ அல்லது இலட்சியம் மட்டுமோ தீர்மானிப்பதில்லை. 

பெற்றோருக்கு எப்படி பிள்ளைகள் என்னவாக வேண்டும் என்ற எண்ணமும், கனவும் இருக்கிறதோ அதே போல பிள்ளைகளுக்கு தாங்கள் என்னவாக வேண்டும் எனும் எண்ணம் ஒவ்வொரு வயதிலும் தனித் தனியே உதிக்கும் கனவாகும். அது பல வகையில் வளர்ந்து செழிப்படைவதும், பலம் பெறுவதும் இயற்கை.

இந்த இரண்டுக்கும் இடையே இருக்கு முரண்பாடுகளில், பெற்றோர்கள் பல சந்தர்ப்பங்களில் தங்கள் கட்டுப்பாட்டை செலுத்துகின்றவர்களாக மட்டுமே இயங்குகின்றார்கள்.

பெரும்பாலான பெற்றோர்களிடம் காணப்படும் அணுகுமுறைகள் (approach)

1) தம் பிள்ளைகளின் கல்வி சூழல் ( school / college environment) மிகவும் போட்டி நிறைந்தது (competitive) அதிலே தாக்குப் பிடித்து, தம் பிள்ளைகள் முதலில் வர வேண்டும், அல்லது முதல் வரிசையில் நிற்க வெண்டும்.

2) படித்து முடித்துவிட்டு வேலை தேட வேண்டுமென்றால், Job Market மிகவும் போட்டி நிறைந்தது (competitive).. ஆகவே தம் பிள்ளை இவ்வளவு மதிப்பெண்(mark) வாங்க வேண்டும், இன்ன படிப்பு தான் (course) தான் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.. அதுவும் இந்த பள்ளி / கல்லூரியில் படித்து வெளியே வந்தாக வேண்டும்.

இந்த எண்னங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மனதுக்குள்ளே பலமடைந்து, கொஞ்சம் கொஞ்சமாக அவை அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைகளாக உருவெடுத்து நிற்கின்றன.

இந்த நம்பிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் போது, அவர்கள் முடிவு எடுக்கும் மிக முக்கியமான தருணம்.

அந்த நிலையில் அவர்கள் தம் பிள்ளைகளுக்கு தங்கள் நம்பிக்கையினை முதலில் சொல்கின்றார்கள், மிக மிக மிதமான நிலையில் விவாதமும் நடக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் + பெற்றோர் தரப்பில் இருக்கும் மிக முக்கியமான அம்சங்கள்.

1. இருக்கும் தகவல்களை தேவையான அளவுக்கு validate செய்து கொள்ள இரண்டு தரப்பும் முயற்சி செய்து, ஆனால் validation செய்ய போதுமான அனுபவமும், பயிற்சியும், முனைப்பும் இல்லாலமல், இருக்கும் தகவலை நம்பி முடிவெடுப்பது.

2. இப்படியான கல்வி நம் பிள்ளைகளுக்கு மிகச் சரியானது என பெற்றொர்கள் கருதி அதை பிள்ளைகள் ஏற்பது, அல்லது பிள்ளைகளுக்கு என தனியே இருக்கும் கல்வி சார்ந்த விருப்பம், எனும் இரண்டு தரப்பும் ஒன்றுக்கொன்று பரிமாறிக்கொள்ளப்படும் போது உருவாகும் மனநிலை மாற்றங்கள் ( Emotions , stress , belief clashes).

3. பிள்ளைகள் தங்களுக்கு இயல்பாக இருப்பதாக கருதும் talent / skill கள் குறித்து அவர்கள் உருவாக்கிக் கொண்ட நம்பிக்கைகள், அவற்றை பெற்றோர்கள் ஆமோதிக்கும் / மறுக்கும் இரண்டு தரப்பு நிலைகள் இதனால் ஏற்படும் மனநிலை மாற்றங்கள் ( Emotions, stress , belief clashes).

4.  எடுக்கும் முடிவினால் தேவைப்படும் மாற்றங்கள் , மிக முக்கியமாக life style changes

5. இப்படியான சூழலில், பிள்ளைகள் பெற்றோர்கள் உறவு நிலைகளுக்கிடையே கருத்து ஒருமித்து முடிவெடுக்க வேண்டிய அவசியம்

மேலே சொன்ன ஐந்து அம்சங்களும் மிகவும் அறிவு பூர்வமாக, ( without bias / prejudice ) , தர்க்க ரீதியாக (logically), உறவு நிலைககளுக்கு என இருக்கும் emotionகளுக்கு இடம் கொடுக்காமல் பெற்றோரும் பிள்ளைகளும் ஆராய வேண்டும்

இந்த ஆராய்ச்சியின் போது இரு தரப்பின் அனுமானங்களும் / யூகங்களும் (perception) நிறைய சவால்களைச் சந்தித்தே தீர வேண்டும்.

இதனால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையா மனக் கசப்பான உரையாடல், விவாதம், சண்டை என சங்கடங்கள் அதிகமாகவும் செய்யும்

ஒவ்வொரு வயதிலும் பிள்ளைகளின் மனோபாவம் எனும் மிக முக்கியமான அம்சத்தினைக் கவனிக்கலாம்

ஒவ்வொரு வயதிலும்
1) குறிப்பிட்டுச் சொல்லும் உறவுகள்( critical relations) ,
2) அதன் மீது நம் எண்ணங்கள் இயங்கும் விதம் ( Modalities) ,
3 ) நம் virtue , 
4) சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்த மாதிரி நம்மைத் தயார் செய்து கொள்ளுதல் / அதில் நாம் செய்யும் தவறுகள் (adaptation and alignments) 

என்ற நான்கு அம்சங்கள் நம்ம கூடவே வரும்

பள்ளி கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கு அவர்கள் வயது range ல் ( 30 வயது முதல் சுமார் 60 வயது வரை) இருக்கும் பெற்றோர்களுக்கு

1. அவர்களின் வாழ்க்கைத் துணை ( wife / husband), பிள்ளைகள் (children) என்பவர்கள் மட்டுமே அவர்களின் குறிப்பிட்டுச் சொல்லும் உறவுகள்( critical relations).
2. இப்படியான critical relation களின் நல்வாழ்வுக்கான முயற்சி மட்டுமே இந்த வயதில் இருப்பவர்களின் எண்ணம், செயல் எல்லாம் (modalities).
3. இந்த வயது range ல் இருப்பவர்களின் virtue அதாவது இயல்பு என்பது தங்களின் critical relation களின் மீது காட்டப்படும் அக்கறை, care மட்டுமே.
4. இந்த வயது range ல் இருப்பவர்களின் நம்பிக்கைகள், அந்த நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளுதல், வாழ்க்கை முறை இவை எல்லாம் மேலே சொன்ன மூன்று அம்சங்களை மட்டுமே சார்ந்திருக்கும்.
இதே நாலு அம்சங்கள் பிள்ளைகளுக்கு ( 11 வயது தொடங்கி 20 வயது வரை) எப்படி இருக்கும் என பார்க்கலாம்

1. இந்த வயது பிள்ளைகளின் critical relation வட்டத்தில் , நண்பர்கள், வகுப்பு தோழமைகள், role model personalities  ( நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள்) இருப்பார்கள்.. இந்த வயதில் critical relation வட்டத்தில் பெற்றோர்களை அவ்வப்போது வைத்துக் கொள்வார்களே அல்லாது நிரந்தரமாக வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

2.  இந்த வயது பிள்ளைகளுக்கு தங்கள் சுயத்தை நிரூபிக்கும் மனப்பாங்கு அவர்கள் modality ஆக இருக்கும்.. உதாரணமாக, I am Siddarth , I am Monica என்பது போன்ற self proclamation சார்ந்த நடவடிக்கை இருக்கும்.. தங்களின் critical relation களில் இருக்கும் நண்பர்கள், தோழமைகளிடம் அங்கீகாரம் பெறுவதற்காக முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.

3. இந்த வயதில் தான் இவர்களின் சாமர்த்தியம், செயல் திறன் competencyன் அடித்தளம் அமையத் தொடங்குகிறது என்பதை கவனிக்க வேண்டும்.. இப்படி competency அமைப்பதே இவர்களுக்கான இந்த வயது virtue ஆக இருக்கும்..

4. நம்பிக்கை, நம்பிக்கை மாற்றி அமைத்துக் கொள்வது இதெல்லாம் இந்த வயதில், மேலே சொன்ன மூன்று அம்சங்களைக் கொண்டு , மிக மிக வேகமாக, குழப்பமாக பிள்ளைகளின் thought process ல் ஓடிக் கொண்டே இருக்கும்.

பெற்றோர்களின் இந்த நான்கு அம்சங்களும், பிள்ளைகளின் இந்த நான்கு அம்சங்களும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொள்ளும் / மோதிக் கொள்ளும் நிலையில் என்ன நடக்கும் ??? அந்த சூழலை எப்படி சமாளிப்பது?
அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போமா..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com