21.திருவாதிரைக் கூட்டு

காவத்தங் கிழங்கு  - மீடியம் சைஸ் ஒன்று (பாலக் காட்டுக்காரர்கள் காவத்து என்று சொல்லப்படும் இக்கிழங்கு இல்லாமல் இந்தக் கூட்டு செய்ய மாட்டார்கள்)
21.திருவாதிரைக் கூட்டு

78) மற்றொரு வகை திருவாதிரைக் கூட்டு:

தேவையானவை

காவத்தங் கிழங்கு  - மீடியம் சைஸ் ஒன்று (பாலக் காட்டுக்காரர்கள் காவத்து என்று சொல்லப்படும் இக்கிழங்கு இல்லாமல் இந்தக் கூட்டு செய்ய மாட்டார்கள்)

எளவன் (வெள்ளைப் பூசணி) – ஒரு சிறிய பத்தை நறுக்கிக் கொள்ளவும்

மத்தன் (மஞ்சள் பூசணி) – ஒரு சிறிய பத்தை நறுக்கிக் கொள்ளவும்

அவரை 

சேப்பங் கிழங்கு – நூறு கிராம்

கூர்க்கங்கிழங்கு – கொஞ்சம்

வாழைக்காய் – பாதி போதும்

கேரட் – சிறியது ஒன்று

பச்சை மொச்சை – 100 gm

தேங்காய் அரை மூடி துருவியது

பச்சை மிளகாய் – நான்கு

கடுகு – ஒரு ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – ஒன்று

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயம் – சிறிது

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

செய்முறை:

என் மாமியார் இந்தக் கூட்டுக்கு புளி சேர்க்க மாட்டார்.

கிழங்குகளைத் தனியே வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

மற்ற காய்களை சுத்தம் செய்து குக்கரில் கொஞ்சம் நீர் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து ஸ்டீமை ரிலீஸ் செய்து விடவும்.

பிறகு கிழங்கு வகைகளையும் காயில் சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் போதே களிக்காக பொடித்து வைத்திருக்கும் வறுத்த அரிசிப் பொடியிலிருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து கூட்டில் சேர்த்து கிளறி விடவும்.

மிக்சியில், தேங்காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றை கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கூட்டில் சேர்த்து கொதிக்க விட்டு மேலே இரண்டு ஸ்பூன் வெளிச்செண்ணெய் சேர்க்கவும்.

தாளிப்பு கரண்டியில் வெளிச்செண்ணெய் விட்டு, ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதன் மீது ஊற்ற வேண்டியதுதான். கமகம திருவாதிரைக் கூட்டு ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com