14. முதுகு வலிக்கு என்ன காரணம்?

முதுகு வலிகள் ஏற்பட காரணமாயிருக்கும் மூல காரணம் (Root cause) என்ன எனக் கண்டுபிடித்து அதை சிகிச்சை (Treatment) மூலம் குணப்படுத்த வேண்டும்.
14. முதுகு வலிக்கு என்ன காரணம்?

இந்த வாரம் குறிப்பிட்ட காரணங்களால் வரும் முதுகு வலி எப்படி வருகிறது என்பதை பற்றிப் பார்ப்போம். இவ்வகையான முதுகு வலி மிகவும் பொதுவான ஒன்று. அதே நேரத்தில் இவ்வகையான முதுகு வலிகள் மிகவும் வலி தரக்கூடிய ஒன்றும் கூட.

முதுகு வலிகள் ஏற்பட காரணமாயிருக்கும் மூல காரணம் (Root cause) என்ன எனக் கண்டுபிடித்து அதை சிகிச்சை (Treatment) மூலம் குணப்படுத்த வேண்டும். ஏனெனில், இவ்வகையான முதுகு வலிக்காக பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. இதில் கிட்டதட்ட 70% சிகிச்சைகள் தற்காலிக தீர்வு மட்டுமே தரக் கூடியவை. உதாரணமாக, இவ்வகை முதுகு வலிக்கு வலி நிவாரணிகள் (Pain killers) தீர்வல்ல. வலி நிவாரணிகள் உங்கள் வலியை மூடி மறைக்கின்றது. இதனால் உங்கள் முதுகு குணம் அடையும் என்பது அறியாமை என்றே நான் கூறுவேன்.

மேலும், வலி நிவாரணிகளால் ஏற்படும் பக்க விளைவுகளும் மிக அதிகம். இவ்வகை வலி நிவாரணிகளை முதுகு வலிக்காக உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கிட்டத்தட்ட 60% மக்கள் முதுகு வலிக்கு மருத்துவமாக எடுத்து கொள்வது இந்த வலி நிவாரணிகளை என்று ஆய்வுகள் கூறுகின்றன. இப்போது குறிப்பிட்ட காரணங்களால் வரும் முதுகு வலிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

குறிப்பிட்ட காரணங்களால் வரும் முதுகு வலி வகைகள் (Specific Lower Back Pain):

➜ Disc Bulge 

➜ Spinal canal stenosis 

➜ Nerve Entrapment

➜ Post Traumatic Injuries 

➜ Scoliosis

➜ Spondylosis (Cervical, Lumbar)

இவை ஒவ்வொன்றும் என்னென்ன காரணங்களால் வருகிறது, இதை எப்படி குணப்படுத்துவது என்பதை நாம் பார்க்கலாம். முதலாவதாக நாம் பார்க்க இருப்பது "Disc Bulge" ஐ பற்றி.

Disc Bulge:

நமது உடலில் மொத்தம் 33 முதுகெலும்புகள் உள்ளன. இந்த முதுகெலும்புகள்தான் நமது உடலின் அடித்தளம் (Foundation) ஆகும். இவை இருப்பதாலேயே நம்மால் நீண்ட நேரம் உட்காரவும், ஓடவும், நடக்கவும் முடிகிறது. சொல்லப் போனால் முதுகெலும்பு இல்லையெனில் நமக்கு உடலே இருக்காது. முதுகெலும்பு இல்லாமல் 1 கிலோ பாரத்தை நம் தலையில் வைத்தால், நம் உடலே சரிந்து விடும். அப்படிப்பட்ட முதுகெலும்புக்கிடையே உள்ளவையே இந்த "Disc" குகள். இவை வழுவழுப்பு தன்மை கொண்டவை. இவை முதுகெலும்புகளுக்கிடையில் "அதிர்ச்சியை உறிஞ்சும்" கருவியாக வேலை செய்கிறது.

இவை மட்டும் இல்லையெனில் முதுகெலும்புகள் ஒன்றன் மீது ஒன்று அழுத்திக் கொண்டு நம்மால் நகர முடியாத நிலை ஏற்படும். இவை முதுகெலும்புகளுக்கிடையில் இருப்பவை. ஆகவே நம் முதுகெலும்பு சீராக இருக்க "Disc" எனப்படும் "Shock Absorbing" கருவி மிக முக்கியம். இந்த "Disc" அதிக அழுத்தத்தினால் தந்து இடத்தை விட்டு வெளியே வருவதே "Disc Bulge" ஆகும். முதுகு வலிகள் ஏற்பட "Disc Bulge" களே மிக முக்கிய காரணம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இவ்வகையான Disc Bulge கல் உங்கள் முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

குறிப்பாக, கழுத்து மற்றும் கீழ் முதுகு பகுதியில் மிக அதிகமாக ஏற்படுகின்றன. இது மட்டுமில்லாமல் இந்த Disc குகள் அதன் இடத்திலிருந்து வெளியே வந்து நரம்புகளை அழுத்துவதால் இன்னும் நிறைய பாதிப்புகள் ஏற்படும். இப்போது "Disc Bulge" கல் ஏற்பட என்ன கரணம் என்பதைப் பாப்போம்.

"Disc" குகள் அதன் இடத்திலிருந்து வெளியே வருவதற்கு முக்கிய காரணம், அந்த இரண்டு முதுகெலுமுக்கிடையில் ஏற்படும் அழுத்தம். இந்த அழுத்தம், நீங்கள் குறிப்பிட்ட அளவிற்கு மீறிய எடையை தூக்கும்போது ஏற்படக் கூடும். உதாரணமாக, நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது நீங்கள் எவ்வளவு எடை தூக்குகிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆராய்ச்சிகளின் படி Disc Bulge வருவதற்கு இதுவும் ஓரு காரணம்.

நீங்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் அந்த குறிப்பிட்ட இடம் அதாவது உங்கள் முதுகு மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் உள்ள தசைகள் வீக்கமடைகின்றன. இதனால் கழுத்து மற்றும் கீழ் முதுகு பகுதிகளில் உள்ள Disc குகள் Bulge ஆகி அதன் இடத்தைவிட்டு வெளியே வருகின்றன. சொல்லபோன்னால் 90% "Disc Bulge" களுக்கு இதுவே கரணம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இப்போது "Disc Bulge" ஐ சிகிச்சை மூலம் எப்படி சரிசெய்வது என்பதை பாப்போம்.

சிகிச்சை முறைகள்:

➜ மேம்பட்ட பிசியோதெரபி சிகிச்சைகள்(Advanced Physiotherapy Treatment)

➜ அறுவை சிகிச்சைகள் (Surgical Treatment)

மேம்பட்ட பிசியோதெரபி சிகிச்சைகள் (Advanced Physiotherapy Treatment):

நான் மேலே கூறியதை போல, உங்கள் முதுகு வலி குணமடைய தற்காலிக தீர்வுகளை விட, நிரந்தர தீர்வுகள் தரக் கூடிய மேம்பட்ட பிஸியோதெரபி சிகிச்சைகள் செய்வதே நல்லது. அதாவது, Manual Therapy, Trigger point release, Exercise மற்றும் வலுப் பயிற்சிகள் போன்ற மருத்துவ சிகிச்சைகள் மூலம் "Disc Bulge"-க்கான மூல காரணத்தை குணப்படுத்த வேண்டும். ஆராய்ச்சிகளும் இதுவே சிறந்த சிகிச்சை எனக் கூறுகிறது. அது மட்டுமில்லாமல் இச்சிகிச்சை அறுவை சிகிச்சை முறையை விட அதிக பலன் தரக் கூடியது எனவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றது.

இது மட்டுமில்லாமல் நடை பயிற்சியும், வெண்ணீர் அல்லது ice pack ஒத்தடம் கொடுப்பதால் ரத்த ஓட்டம் அதிகரித்து "Disc Bulge" குணமடைய உதவும்.

அறுவை சிகிச்சைமுறை:

அறுவை சிகிச்சை முறையால், உங்கள் "Disc" அகற்றப்படும் அல்லது எந்த அளவு Bulge உள்ளதோ அது நீக்கப்படும். ஆனால், இவ்வகை அறுவை சிகிச்சைகளின் வெற்றி விகிதம் (Success rate) மிகக் குறைவு. ஏனெனில் நம் முதுகு என்பது பல்லாயிரக்கணக்கான நரம்புகள் உள்ள ஒரு உடல் பாகம். இதனால் இவ்வகை அறுவை சிகிச்சைகள் நிறைய பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். ஆகவே என்னுடைய 15 ஆண்டுகால அனுபவத்தால் கூறுகிறேன், "Disc Bulge" பிரச்னைகளுக்கு மேலே கூறிய மேம்பட்ட பிசியோதெரபி சிகிச்சைகளில் ஏற்படும் பலன், அறுவை சிகிச்சையை விட அதிகம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நீங்கள் "பிசியோதெரபி" மூலம் குணமடையவில்லை என்றால் மட்டுமே அறுவை சிகிச்சையை பற்றி யோசிக்க வேண்டும்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com