சிவயோகி சிவகுமார்

சிவயோகி சிவகுமார்

சிவயோகி சிவகுமார், சென்னை அருகே புத்தகரம் கிராமத்தில் வசித்து வருகிறார். எழுத்தாளர், சிந்தனையாளர், ஆளுமைப் பண்புகள் கொண்டவர். யோக சாதனைகள் மூலம் கடந்த 2002-ம் ஆண்டு ஞானமடைந்தவர். புத்தகரத்தில் யோகக்குடில் எனும் யோக சாதனை மையத்தை நிறுவி, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இறைத்தேடுதல் சாதனையை நிகழ்த்தி வருகிறார். ரயில்வே துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு கொடுத்தவர். சென்னைப் பல்கலையில் வணிகவியல், தமிழ் இலக்கியம், உளவியல், சமூகவியல் பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர். திருமந்திரம், திருக்குறள், சிவவாக்கியம், அவ்வைப் பாடல்கள், பட்டினத்தார் பாடல்களில் ஆழக் கரை கண்டவர். ஆழ்ந்த புலமை உடையவர். நன்றியுணர்வு, நீதான் கடவுள், துன்பம் உணக்கில்லை எனும் நூல்களின் ஆசிரியர். இல்லறத்தில் இருந்துகொண்டே யோக சாதனைகள் மூலம் ஞானம் பெற்றவர். உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் எண்ணற்ற விளக்கவுரை கொடுத்திருந்தாலும், சிவயோகி சிவக்குமார் இதனை யோகக் கண்ணோட்டத்தி்ல், சித்தர் மார்க்கத்தில் இருந்து காண்கிறார். இதற்காக அவர் தரும் விளக்கவுரை முற்றிலும் வித்தியாசமானது. இதனை வாராவாரம் ஒரு அதிகாரமாக தினமணி இணையதளத்தில் காணலாம். விமரிசனங்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புக்கு - 94441 90205.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை