கொழும்பு, டிச.5: இலங்கையில் பெய்துவரும் கனமழையால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
தெற்குப் பகுதி மாவட்டமான மாத்தராவில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும், மத்திய வெளிமட மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கி மற்றொருவர் உயிரிழந்ததாகவும் தேசிய பேரிடர் மையம் தெரிவித்தது.
கனமழை காரணமாக 56,900 பேர் வீடுகளை இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனிடையே புத்தாண்டு வரை கனமழை இருக்கும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.