திருநெல்வேலி, டிச.5: திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளச் சேத மதிப்பீடு குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் அரசு முதன்மைச் செயலர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் சுர்ஜித் கே. சவுத்ரி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயராமன், மாவட்ட வருவாய் அலுவலர் ரமண சரஸ்வதி, சேரன் மகாதேவி, சேரன் மகாதேவி சார் ஆட்சியர் வீரராகவராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.