புதுதில்லி, டிச.19: நாட்டின் பாதுகாப்புக்கு இந்து தீவிரவாதம் அச்சுறுத்தலாக இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல்காந்திக்கு தகவல் எங்கிருந்து கிடைத்தது என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்து தீவிரவாதம் குறித்து திக்விஜய் சிங்கும், ராகுல்காந்தியும் எங்கிருந்து தகவல் பெற்றனர்?. நாங்கள் அதை அளிக்கவில்லை என அரசு கூறுகிறது. ஐஎஸ்ஐ அவருக்கு உதவிசெய்ததா? என சுவாமி தில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.