மார்ச் 13ல் சட்டப்பேரவை கட்டடம் திறப்புவிழா: பிரதமர் பங்கேற்பு

சென்னை, ஜன.13- வரும் மார்ச் 13ம் தேதி தமிழக சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக புதிய கட்டடத்தின் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில், பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். 'அந்த விழ

சென்னை, ஜன.13- வரும் மார்ச் 13ம் தேதி தமிழக சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக புதிய கட்டடத்தின் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில், பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

'அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வருவது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்' என்று மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

இத்தகவல் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா சாலை அருகேயுள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்திற்கான வளாகம் 425 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com