பெங்களூர், ஜன.23: ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தன்மீது வழக்குத் தொடர ஆளுநர் பரத்வாஜ் அனுமதி அளித்திருப்பதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று தில்லி புறப்பட்டுச் சென்றார்.
ஆளுநரின் போக்கு குறித்தும், அரசியல் நிலைமை குறித்தும் தேசியத் தலைவர்களை சந்தித்து விவாதிக்க உள்ளதாக தில்லி புறப்படும் முன் எடியூரப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் சென்று ஆளுநர் குறித்து குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க முடிவுசெய்துள்ளதாக எடியூரப்பா தெரிவித்தார்.