சென்னை, ஜூலை 4: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு புதிய தலைவரை நியமித்து தமிழக அரசு செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது.
உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பதவியை, இதுநாள்வரை தகவல் தொழில்நுட்பவியல் துறையின் செயலர் டாக்டர். சந்தோஷ்பாபு கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில் இன்று கே.ராதாகிருஷ்ணனை அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக நியமித்து அரசு அறிவித்துள்ளது.
அதிமுகவில் முக்கியப் பொறுப்பில் உள்ள ராதாகிருஷ்ணன், ஒரு கேபிள் டிவி ஆபரேட்டரும்கூட!