திருப்பதி, ஜூலை 4- திருப்பதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள இலவச உணவு வளாகக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வரும் 7-ம் தேதி திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அவர் ஜூலை 6-ம் தேதி மாலை திருப்பதி வந்து சேர்கிறார். மறுநாள் கோயிலில் தரிசனம் செய்த பின்னர், இலவச உணவு வளாகத்தை பிரதீபா பாட்டீல் திறந்து வைக்கிறார்.
குடியரசுத் தலைவருடன் முதல்வர் கிரண்குமார் ரெட்டி மற்றும் ஆளுநர் நரசிம்மன் ஆகியோரும் திருப்பதி நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக தற்போது மிகப் பிரமாண்டமான அளவில் இலவச உணவு வளாகம் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவரின் வருகை காரணமாக திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.